தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட வேலைவாய்ப்பு ஆபீசில் குரூப் 4 தேர்விற்கு மாதிரி தேர்வு

மாவட்ட வேலைவாய்ப்பு ஆபீசில் குரூப் 4 தேர்விற்கு மாதிரி தேர்வு

மாவட்ட வேலைவாய்ப்பு ஆபீசில் குரூப் 4 தேர்விற்கு மாதிரி தேர்வு


UPDATED : நவ 09, 2026 12:41 PM

ADDED : நவ 09, 2026 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 12:41 PM ADDED : நவ 09, 2026 12:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் மதுபாலன் வெளியிட்ட அறிக்கை:

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய மாதிரி தேர்வுகள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தொடங்கப்பட்டுள்ளது. இத்தேர்வு, மண்டல அளவில், ஏழு மாவட்டங்களுக்கு பொதுவான மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசைப்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அசல் தேர்வை போன்றே நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, வாரம் தோறும் செவ்வாய் கிழமை, 10 பாடவாரியான தேர்வுகளும், இரண்டு முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

நாமக்கல் மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், 2025-26ல் வெளியான தேர்வு முடிவுகளில் மட்டும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில், 17 பேர், குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வில், 15 பேர், குரூப் 2, 2ஏ தேர்வில், இரண்டு பேர், டி.என்.யு.எஸ்.ஆர்.பி., பி.சி., தேர்வில், 19 பேர், பி.ஜி., டி.ஆர்.பி., தேர்வில், இரண்டு பேர், கூட்டுறவு தேர்வில், 23 பேர், சுகாதார ஆய்வாளர் தேர்வில், 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286 - 222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது decgcnklclass@gmail.com என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us