சட்ட படிப்பு காலி இடங்களுக்கு 6ம் தேதி மாப் ஆப் கவுன்சிலிங்
சட்ட படிப்பு காலி இடங்களுக்கு 6ம் தேதி மாப் ஆப் கவுன்சிலிங்
UPDATED : டிச 04, 2024 12:00 AM
ADDED : டிச 04, 2024 03:58 PM

புதுச்சேரி:
அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில் காலியாக முதுகலை சட்ட படிப்பு இடங்களுக்கான மாப்-ஆப் கவுன்சிலிங் வரும் 6ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாியில் முதுகலை சட்ட படிப்பு மற்றும் முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்புக்கான 2024- 25ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 16ம் தேதி நடந்தது.
இதில், முதுகலை சட்ட படிப்பில் 4 இடங்களும் (எஸ்.சி., பிரிவினர் மட்டும்), முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்பில் 5 இடங்களும் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாப்-ஆப் கவுன்சிலிங் வரும் 6ம் தேதி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
முதுகலை சட்ட படிப்பில் எஸ்.சி., பிரிவில் காலியாக உள்ள 4 இடங்கள் சாதி சான்றிதழ் தகுதியின் அடிப்படையில் ஒதுக்கப்படும். முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்பில் காலியாக உள்ள 5 இடங்கள் அரசிடமிருந்து வழங்கப்பட்ட குடியிருப்புச் சான்றிதழ்களை கொண்டு ஒதுக்கப்படும்.
எனவே, முதுகலை சட்ட படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் 6ம் தேதி காலை 11:00 மணிக்கு, முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் மதியம் 2:30 மணிக்கு தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். இதில், விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்களும் பங்கேற்கலாம்.