தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு செல்லுமா? 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை!

அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு செல்லுமா? 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை!

அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு செல்லுமா? 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை!


UPDATED : ஆக 28, 2020 12:00 AM

ADDED : ஆக 28, 2020 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2020 12:00 AM ADDED : ஆக 28, 2020 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி;
&'எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிக்கக் கூடாது&' என, 2004ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்வது தொடர்பான வழக்கை, ஏழு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்ற, உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, ஆந்திர பிரதேச அரசுக்கு எதிராக, இ.வி. சின்னையா என்பவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், 2004ல் தீர்ப்பு அளித்தது.&'எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிக்கக் கூடாது&' என, ஐந்து நீதிபதிகள் அமர்வு அப்போது தீர்ப்பு அளித்தது.

உத்தரவு

இதற்கிடையே, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான, 18 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு, 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, தமிழக அரசு, 2009ம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, எம்.ஆர். ஷா, வினீத் சரண், அனிருத்தா போஸ் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்து வந்தது.
பரிந்துரை

வழக்கின் விசாரணையின் போது, அமர்வு கூறியதாவது:

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அளவை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது, உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக முடிவு செய்யவும் மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அமர்வு, 2004ல் அளித்த தீர்ப்பில், இது கவனிக்கப்படவில்லை என்று தோன்றுகின்றது.
இந்த விஷயத்தில், உள் ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என, ஐந்து நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. அதனால், இந்த பிரச்னை குறித்து, ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதே உகந்ததாக இருக்கும் என, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம். இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us