பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., படிப்பு 7க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., படிப்பு 7க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
UPDATED : ஜூலை 05, 2026 11:29 AM
ADDED : ஜூலை 05, 2026 11:30 AM
கரூர்:
பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., படிப்புகளுக்கு, வரும், 7ல் விண்ணப்பிக்க கடைசி நாள் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்களில், 2026 - 27ம் கல்வியாண்டிற்கான நர்சிங், மருந்தாளுநர் உள்பட துணை மருத்துவ படிப்புகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
இதில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., மற்றும் மருத்துவ ஆய்வக தொழில் நுட்பம், கதிரியக்கவியல், டயாலிசிஸ் தொழில் நுட்பம், அறுவை சிகிச்சை அரங்கு தொழில் நுட்பம் ஆகிய படிப்புகள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம், முற்றிலும் மதிப்பெண் தகுதி மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின் படி நடக்கும்.
இதற்கு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் படிப்பிற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnmedicalselection.org என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டப்படிப்புகள் வரும், 7க்குள், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் வரும், 21க்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி தேவைப்படும் மாணவர்களுக்காக, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லுாரிகளில் உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி தொலைபேசி எண், 04324 - 242280, மாவட்ட உதவி மைய தொலைபேசி 9566566727, ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
