தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலைக்கு விரைவில் 73 பேராசிரியர்கள்

மதுரை காமராஜ் பல்கலைக்கு விரைவில் 73 பேராசிரியர்கள்

மதுரை காமராஜ் பல்கலைக்கு விரைவில் 73 பேராசிரியர்கள்


UPDATED : ஏப் 11, 2013 12:00 AM

ADDED : ஏப் 11, 2013 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2013 12:00 AM ADDED : ஏப் 11, 2013 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: "மதுரை காமராஜ் பல்கலையில் 73 பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்" என, துணைவேந்தர் கல்யாணி தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இப்பல்கலையில் 107 படிப்புகள் உள்ளன. சினிமா தொழில்நுட்பம், சுற்றுலா மேலாண்மை உட்பட 80 படிப்புகள் கடந்த ஆண்டில் துவக்கப்பட்டன. புதிதாக இளைஞர் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரு இருக்கைகள் உட்பட 18 இருக்கைகளும் உள்ளன.

பல்கலை வளாகத்தில் ரூ. 4 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டடம் கட்டப்படும். இதில், புதிய ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள், தகவல் மையம், தொலை தொடர்பு துறையில் படிக்கும் அறிவியல் மாணவர்களுக்கான ஆய்வுக் கூட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பல்கலை வளாகத்தை புதுச்சேரி ஆரோவில் பவுண்டேஷன் ஒத்துழைப்புடன், பசுமையாக மாற்ற ஏற்பாடுகள் நடக்கிறது. தொலை தொடர்பு துறையில் 23 பேர், ரெகுலர் வகுப்புகளுக்கு 50 பேர் என பேராசிரியர்கள் நியமனத்தை வரும் ஜூனுக்குள் நடத்த முடிவு செய்துள்ளோம்.

மதுரை பல்கலை கல்லூரியில் ரூ. 30 லட்சத்தில் ஆடிட்டோரியம் கட்டப்படும். இவ்வாறு, கல்யாணி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us