தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு


UPDATED : ஜூலை 17, 2024 12:00 AM

ADDED : ஜூலை 17, 2024 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2024 12:00 AM ADDED : ஜூலை 17, 2024 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலாடி:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 143 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5வரை படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவுவழங்கப்படுகிறது.

கடலாடி ஒன்றியம் கன்னிராஜபுரம் சத்திரிய நாடார்நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் துவக்க விழாநடந்தது. அமைச்சர்ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் பேசியதாவது:


காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு முதலில் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரைபடிக்கின்ற மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

தற்போது அனைத்து அரசு உதவி பெறும்பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கியுள்ளார். அதன்படி மாவட்டத்தில் 143 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வரை படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது என்றார்.

ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மகளிர் திட்ட இயக்குநர் சையித்சுலைமான் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us