ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளியில் 38 தற்காலிக ஆசிரியர் பணிக்கு அழைப்பு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளியில் 38 தற்காலிக ஆசிரியர் பணிக்கு அழைப்பு
UPDATED : ஜூலை 17, 2024 12:00 AM
ADDED : ஜூலை 17, 2024 10:16 AM
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலம், அரசு பழங்குடியினர் நல உறைவிடப்பள்ளிகளில், 38 இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். உரிய தகுதியுடன், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர், டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள், பட்டியலினத்தவர்கள், பள்ளிக்கு அருகே உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாக அல்லது அஞ்சல் மூலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும், 22ம் தேதி காலை, 11:00 மணிக்குள் வழங்க வேண்டும். இந்த அலுவலகத்தில் காலிப்பணியிட விபரங்கள் உள்ளன. கூடுதல் விபரத்துக்கு கலெக்டர் அலுவலகத்தில் நான்காம் தளத்தில் செயல்படும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம்.