அரசு பாலிடெக்னிக் விண்ணப்பிக்க ஜூலை 9 வரை நீட்டிப்பு
அரசு பாலிடெக்னிக் விண்ணப்பிக்க ஜூலை 9 வரை நீட்டிப்பு
UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM
ADDED : ஜூன் 29, 2023 09:31 AM
கோவை:
அவிநாசி சாலையில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடந்தது. இரண்டாம் கட்டமாக கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சிவில் இன்ஜினியரிங் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), புரடக்சன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், இ.சி., சாண்ட்விச், இ.சி.ஜி., டெக்னாலஜி, ஆகிய பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இக்காலியிடங்களில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள், நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி, ஜூலை 9 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பத்தாம் வகுப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், டி.சி., ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஐந்து நகல்கள், ஐந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, 99445-66977/88835-88229 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
