UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM
ADDED : ஜூன் 29, 2023 09:32 AM
கோவை:
மாநில அரசு மற்றும் அரசு தொழில்நுட்ப கல்லுாரி ஐ.டி., துறை சார்பில், பேராசிரியர்களுக்கான பல்திறன் மேம்பாட்டு பயிற்சி, ஜூலை 10 முதல் நான்கு நாட்களுக்கு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி ஆசிரியர் பயிற்சி மேம்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.கிளவ்டு கம்ப்யூட்டிங், கிளவ்டு சர்வீஸ் மேனேஜ்மென்ட், புரோகிராமிங், ஆப் டெவலப்மென்ட், சாப்ட்வேர் டெஸ்டிங், வெப் அப்ளிகேஷன் செக்யூரிட்டி உள்ளிட்ட, பல்வேறு தொழில்நுட்ப தலைப்புகளில், வல்லுநர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், பயிற்சியில் பங்கேற்கலாம். உணவு, தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படுவதுடன், போக்குவரத்து செலவின தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 3க்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://gct.ac.in/ என்ற இணையதளத்தில், பதிவுக்கான லிங்க் பயன்படுத்தி பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
