UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM
ADDED : ஜூன் 29, 2023 09:35 AM
கோவை:
கோவை வேளாண் பல்கலையில், 12 ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டு மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டள்ளது.வேளாண் பல்கலை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்படும். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்படும். இறுதியாக, 2012ல் கண்காட்சி நடத்தப்பட்டது. அதன் பின் துணைவேந்தர்கள் ஆர்வம் காட்டாததால் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டு, மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள், மலர் சார்ந்த மதிப்புக்கூட்டு தொழில்முனைவோர் நலன் கருதி, கண்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை மையமாக வைத்து, பல்கலையில் புதிய பிரமாண்ட நுழைவாயில் கட்டப்படுகிறது. முதல்கட்டமாக துாய்மை பணி துவக்கப்பட்டுள்ளது.பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், ஆக., இறுதியில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அதற்காக துாய்மை பணி துவக்கப்பட்டுள்ளது, என்றார்.
