தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமங்களில் இக்னோ சமுதாய கல்லூரிகள்

கிராமங்களில் இக்னோ சமுதாய கல்லூரிகள்

கிராமங்களில் இக்னோ சமுதாய கல்லூரிகள்


UPDATED : மே 16, 2011 12:00 AM

ADDED : மே 16, 2011 09:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2011 12:00 AM ADDED : மே 16, 2011 09:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிராமங்களில் இக்னோ சமுதாய கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அதன் மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.


மதுரையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்றுநர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை பேரா., ஜெயராமன் பேசியதாவது: இந்த பயிற்சி முகாம் மூலம் இளைஞர்கள் சிறிய முதலீட்டில் காளான், தேனி வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டு அதிக அளவில் வருமானம் ஈட்ட முடியும். 2022க்குள் 50 கோடி பேருக்கு தொழில் தொடங்குவதற்கான பயிற்சி கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


17 அமைச்சகங்களும், 20 துறைகளும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கிராமப்புற இளைஞர், இளம்பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதன் மூலம் இந்தியா தொழில் துறையில் தன்னிறைவு அடைய முடியும், என்றார். இக்னோ பல்கலை மண்டல இயக்குனர் சண்முகம் பேசியதாவது: இக்னோ பல்கலை., சமுதாய கல்லூரி என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது. பள்ளிப் படிப்பை தொடர முடியாதவர்கள் இதில் சேர்ந்து பயன் பெறலாம். சேவை நிறுவனங்கள், சமுதாய கல்லூரிகளை தொடங்க முன் வரவேண்டும்.


அதற்கு அங்கீகாரம் கொடுக்க இக்னோ தயாராக உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் உறுதுணையாக உள்ளது. இக்னோ பல்கலை தொழில் முனைவோருக்கான பட்டயப் படிப்புகளை தொடங்க உள்ளது. கிராமங்களில் உள்ளவர்கள் வெளிமாநிலங்கள், நாடுகளில் வேலை செய்ய சான்றிதழ் இல்லாத நிலை உள்ளது. சமுதாய கல்லூரி மூலம் இவர்கள் சான்றிதழ் பெற்று அதிக சம்பளம் பெற முடியும். இந்திய அளவிலான சமுதாய கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்ற கூட்டம் மதுரையில் மே 31-ல் நடக்கிறது. இதில் பங்கேற்கும் சேவை நிறுவனங்கள் மே 20க்குள் விண்ணப்பங்களை இக்னோவில் சமர்ப்பிக்கலாம். கிராமங்கள் தோறும் சமுதாய கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us