தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை பட்டப்படிப்பு காலக்கெடு நீட்டிப்பு

கால்நடை பட்டப்படிப்பு காலக்கெடு நீட்டிப்பு

கால்நடை பட்டப்படிப்பு காலக்கெடு நீட்டிப்பு


UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM

ADDED : ஜூன் 01, 2011 03:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM ADDED : ஜூன் 01, 2011 03:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது பற்றி பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவு பதனிடும் தொழில் நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், கடந்த மே 2 முதல் வழங்கப்படுகின்றன.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன் 9ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும். சென்னை, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ராஜபாளையம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களில், ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.


வரும் சனிக்கிழமை (4ம் தேதி) அன்றும் விண்ணப்பங்கள் பல்கலை மையங்களில் வினியோகம் செய்யப்படும். மேலும், தகவல்களை பல்கலை இணையதள முகவரியில் (www.tanuvas.ac.in) அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us