தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த மாணவனாக உதவும் தியானம்!

சிறந்த மாணவனாக உதவும் தியானம்!

சிறந்த மாணவனாக உதவும் தியானம்!


UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM

ADDED : ஜூன் 02, 2011 03:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM ADDED : ஜூன் 02, 2011 03:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மனிதவாழ்வில் மகத்தான இடத்தை பிடித்துள்ள தியானத்தை, மாணவர்கள் சிறந்த முறையில் கைகொண்டால் வெற்றி அவர்களுக்கே.


தியானம் என்பது வாழ்க்கை முழுவதற்குமே தேவைப்படும் ஒரு அம்சம் என்றாலும், மாணவர் பருவம் போன்ற வாழ்வை நிர்ணயிக்கும் ஒரு காலகட்டத்தில் தியானத்தின் தேவை முக்கியமானது. அதன்மூலம் மாணவர்கள் அடையும் நன்மை அளப்பரியது. அமைதியான மனம், சிறந்த தக்கவைப்பு, நல்ல ஆரோக்கியம், கவனம் மற்றும் ஒருமுகப்படுத்தும் சக்தி போன்றவை தியானத்தினால் கிடைக்கும் சில பிரதான நன்மைகள்.


சில மாணவர்களுக்கு ஒரு விஷயத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கவனம் செலுத்த இயலாது. (உதாரணம் - தேர்வு நெருங்கும் சமயத்தில் புத்தகத்தை எடுத்து படிப்பது சிலருக்கு எரிச்சலாக இருக்கும். அதை அவர்கள் அழுத்தமாகவும் உணர்வார்கள்). தியானத்தின் மூலம் இந்த நிலையை மாற்றலாம்.


தியானத்தின் நன்மை பல மாணவர்களுக்கு தெரிந்திருந்தாலும், தியானத்தை எப்படி செய்வது என்று தெரியாததாலும், அதை ஒரு மிகப்பெரிய கடினமான விஷயமாக நினைப்பதாலும், மாணவர்கள் தியானம் பற்றி நினைத்தாலே சோர்ந்து விடுகிறார்கள். ஆனால் அவ்வாறு நினைத்து பயப்பட தேவையில்லை. தியானம் என்பதன் ஆரம்ப பயிற்சியாக மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.


உங்களின் மூச்சை நீங்கள் கட்டுப்படுத்திப் பழக வேண்டும். இந்த பயிற்சியை நீங்கள் ஓய்வு கிடைக்கும் எந்த நேரத்திலும் செய்யலாம். இரவு தூங்கும் முன்புகூட செய்யலாம். அதேசமயம், மூச்சுப் பயிற்சியை, சற்று குளிர்ச்சியான, வெளிச்சம் குறைந்த, இரைச்சலற்ற இடத்தில் செய்வது சிறந்தது. இந்த பயிற்சியில், உங்களின் கவனம் முழுவதும் மூச்சில்தான் இருக்க வேண்டும். மூச்சு உள்ளே செல்வதையும், வெளியேறுவதையும் கவனிக்க வேண்டும்.


ஆரம்பத்தில் உங்களின் மனம் அங்கங்கே அலை பாய்ந்தாலும், இறுதியில் அது மூச்சை நோக்கி இழுத்துவரப்பட்டு, அதன்மீதே நிலைநிறுத்தப்படும். கட்டுக்கடங்காமல் ஓடும் எண்ணங்களை கடினப்பட்டு அடக்காமல், ஆராம்பத்தில் அதன்போக்கிலேயே விட்டுவிடவும். பின்னர் அது தானாகவே சரியாகிவிடும். உங்களின் கவனம் எல்லாம் மூச்சிலேயே இருக்க வேண்டும்.


இந்த பயிற்சி ஆரம்பத்தில் உங்களுக்கு கடினமாக இருந்தாலும், போகப்போக எளிதாகிவிடும். பொதுவாக, அதிகாலை மற்றும் தூங்குவதற்கு முந்தைய நேரங்கள் தியானம் செய்வதற்கு சிறந்த பொழுதுகள். மேலும், படிப்பதற்கு முன்பும், உண்பதற்கு முன்பும் இதை செய்யலாம். இதன்மூலன் உங்களின் மனம் மட்டுமில்லாமல், உடலும் ரிலாக்சாக இருக்கும்.


ஒரு சூப்பர் மாணவனாக உங்களை உருவாக்குவதில், தியானமே உங்களின் சிறந்த குரு என்பதை மறந்துவிட வேண்டாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us