தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியலில் சேர விண்ணப்பித்தவர்கள் குறைவு

பொறியியலில் சேர விண்ணப்பித்தவர்கள் குறைவு

பொறியியலில் சேர விண்ணப்பித்தவர்கள் குறைவு


UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM

ADDED : ஜூன் 04, 2011 02:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM ADDED : ஜூன் 04, 2011 02:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டு வந்தன. ஜுன் 3ம் தேதி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் என்பதால் அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் கூட்டம் அலைமோதியது.


ஜுன் 3ம் தேதி மாலை வரை 1,43,000 விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வந்து சேர்ந்தன. தபால்களில் அனுப்பிய விண்ணப்பங்கள் இரண்டு நாட்களில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பி. மன்னர் ஜவகர் கூறுகையில், இன்னும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானல் இந்த ஆண்டில் மொத்தம் 1,60,000 விண்ணப்பங்கள் வரும்.
கந்த ஆண்டு 2,05,000 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. அதில் 1,70,000 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. அதில் 1,12,000 பேர் கவுன்சிலிங் மூலம் சேர்க்கை பெற்றனர்.


இந்த ஆண்டு வந்துள்ள விண்ணப்பங்கள் அனைத்துக்கும் ரேண்டம் நம்பர் வழங்கப்படும். ரேண்டம் நம்பர் கொடுத்துவிட்டால் அப்ளிகேஷன் சரியாக இருக்கிறது என்று அர்த்தம் இல்லை.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப மனுக்கள் மீது 1ம் தேதி முதல் பரிசீலனை நடைபெறும். இந்த பரிசீலனை 25 நாட்கள் நடைபெறும். அப்போது சரியானவை ஏற்கப்படும். சரி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதன் பின்னர் தகதியான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும்.


ரேங்க் பட்டியல24ம் தேதி வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் தொடங்கிய சில நாட்களில் பொறியியல் கவுன்சிலிங் தொடங்குவது வழக்கம். கவுன்சிலிங்கை அரசு எந்த தேதியில் தொடங்க கூறுகிறதோ அதனபடி நடத்தப்படும்.


முதலில் விளையாட்டு வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள், உடல் ஊனமுற்றவர்களுக்கு நடத்தப்படும். பின்னர் தொழில்கல்வி மாணவர்களுக்கும், பின்னர் பொது கவுன்சிலிங்கும் நடத்தப்படும். பொது கவுன்சிலிங் மட்டும் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும்.


இந்த ஆண்டு புதிய கல்லூரிகள் மூலமும் பழைய கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் மூலமும் நிறைய இடங்கள் வர வாய்ப்பு உள்ளது. அதனால் விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்று மன்னர் ஜவகர் கூறினார்.


கடந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் மாணவர சேர்க்கை நடைபெற்றது. அப்போதே சுமார் 8 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு சுமார் 25,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us