தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கையில் எச்சரிக்கை தேவை

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கையில் எச்சரிக்கை தேவை

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கையில் எச்சரிக்கை தேவை


UPDATED : ஜூன் 05, 2011 12:00 AM

ADDED : ஜூன் 05, 2011 05:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2011 12:00 AM ADDED : ஜூன் 05, 2011 05:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 6 ம் தேதி முதல், தினமும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாயின. கடந்த ஆண்டை விட ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் மற்றும் முக்கிய பாடங்களில் சென்டம் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை, இந்தாண்டு அதிகரித்தது. எனினும், முக்கிய பாடங்களில் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.


இந்தாண்டு, விடைத்தாள் நகல் கேட்டு, 78 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் திட்டத்தின் கீழ் 2,000 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்காக, விடைத்தாள் நகல் எடுத்து அனுப்புதல், மறு கூட்டல் பணிகளை கவனித்தல், மறு மதிப்பீடு பணிகளை கவனித்தல் ஆகியவற்றுக்காக, நூலகத் துறை இணை இயக்குனர் நரேஷ் தலைமையில், தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு, அங்கு 150 பணியாளர்கள், விடைத்தாள் நகல் எடுத்தல், அனுப்புதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் நகல் அனுப்பும் பணி, நேற்று துவங்கியது. நாளை முதல், தினமும் 8,000 முதல் 10 ஆயிரம் பேருக்கு விடைத்தாள் நகல் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் பெரும்பாலான மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல் கிடைத்துவிடும்.


மாணவர்கள் உஷார்: மாணவர்கள், விடைத்தாள் நகலை பெற்றதும், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தால், முதலில் சம்பந்தபட்ட பாட ஆசிரியரின் ஆலோசனையை கேட்க வேண்டும். மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தால், கூடுதலாக மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என ஆசிரியர் உறுதியாக கூறினால் மட்டுமே, மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆலோசிக்காமல் விண்ணப்பித்தால், ஏற்கனவே பெற்ற மதிப்பெண்கள் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.


முதலில் விடைத்தாளை திருத்திய ஆசிரியர்களே, மறு மதிப்பீட்டின்போதும் திருத்த மாட்டார்கள். வேறு ஆசிரியர்கள்தான், மறு மதிப்பீடு செய்து, புதிய மதிப்பெண்களை வழங்குவர். ஏற்கனவே ஒரு விடைக்கு கொடுத்த மதிப்பெண்கள் மிகவும் அதிகம் என ஆசிரியர்கள் கருதினால், அந்த மதிப்பெண்களை குறைத்து, புதிய மதிப்பெண்களை வழங்குவர். எனவே, இந்த விவகாரத்தில் மாணவர்கள் மிகவும் உஷாராக செயல்பட வேண்டும்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us