UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM
ADDED : ஜூன் 17, 2011 05:04 PM
விண்ணப்பத்துடன் எந்தெந்த ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும் என்பது பல மாணவர்களுக்கு இன்னும் தெளிவாக தெரிவதில்லை. எனவே அந்த நடைமுறையைப் பற்றி மாணவர்கள் தெளிவாக தெரிந்து வைத்துக்கொண்டால், பின்வரும் தலைமுறைகளுக்கும் தெளிவாக வழிகாட்ட முடியும்.
* முழுமையாக நிரப்பப்பட்ட கோடிங் சீட்.
* சான்றளிக்கப்பட்ட 12 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அல்லது அதற்கு சமமான படிப்பின் மதிப்பெண் பட்டியல் நகல்.
* சான்றளிக்கப்பட்ட மாற்று சான்றிதழ் நகல்.
* சான்றளிக்கப்பட்ட 10 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்.
* சான்றளிக்கப்பட்ட நிரந்தர ஜாதி சான்றிதழ் நகல்(தேவைப்பட்டால்).
* சான்றளிக்கப்பட்ட நேட்டிவிட்டி சான்றிதழின் நகல்(தேவைப்பட்டால்).
* 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டின் நகல்.
* சான்றளிக்கப்பட்ட முதல் பட்டதாரி சான்றிதழுக்கான நகல்(தேவைப்பட்டால்).
* டி.டி. மற்றும் தொடர்புடைய சான்றிதழுடன் கூடிய சிறப்பு ஒதுக்கீட்டு படிவம்(தேவைப்பட்டால்)
* சுய முகவரி எழுதப்பட்ட, அஞ்சல்தலை ஒட்டப்பட்ட தபால் உறை.
* சான்றளிக்கப்பட்ட இலங்கை தமிழ் அகதி சான்றிதழ் நகல்(தேவைப்பட்டால்).
இத்தகைய
ஆவணங்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தைThe Secretary
Tamilnadu Engineering Admissions
Anna university
Chennai - 600 025
என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.