தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள பணி வாய்ப்பு

யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள பணி வாய்ப்பு

யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள பணி வாய்ப்பு


UPDATED : ஜூலை 26, 2011 12:00 AM

ADDED : ஜூலை 26, 2011 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2011 12:00 AM ADDED : ஜூலை 26, 2011 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசுப் பணிகளுக்கான ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதில் யு.பி.எஸ்.சி., என்ற யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆணையம் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். புது டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பின் சார்பாக உதவியாளர் மற்றும் ஸ்டேஷன் ஆபிசர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேவைகள்:
யு.பி.எஸ்.சி.,யின் அசிஸ்டன்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்க 28.07.2011 அன்று 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஸ்டேஷன் ஆபிசர் பிரிவுக்கு விண்ணப்பிக்க இதே தேதியன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக டவுன், சிடி, அர்பன், ரீஜனல் பிளானிங் பிரிவில் முதுநிலை டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இன்ஸ்டியூட் ஆப் டவுன் பிளானர்ஸ் இந்தியா வழங்கும் அசோசியேட்ஷிப் முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. ஸ்டேஷன் ஆபிசர் காலி இடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். என்.எப்.எஸ்.சி., நாக்பூர் வழங்கும் ஸ்டேஷன் ஆபிசர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயர் &'இ&' பிரிவில் கிரேடு 1 அளவு தேர்ச்சி பெற்றவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் அல்லது டிபன்ஸ் பயர் சர்வீஸில் 3 ஆண்டுகால தீ தடுப்பு அனுபவமும் வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க உயரம் குறைந்த பட்சம் 165 செ.மி., இருக்க வேண்டும். ஹெவி வெகிக்கிள் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

இதர விபரங்கள்:
யு.பி.எஸ்.சி.,யின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.50/க்கான சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி.., எஸ்.டி., பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பங்களை பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் சுய விலாசமிட்ட ரூ.6/க்கு ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட போஸ்ட் கார்டையும் இணைக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற கட்டாயம் இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 28.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முகவரி:
Union Public Service Commission,
Dholpur House,
Shajahan road,
New Delhi - 110069.

இணையதள முகவரி: http://www.upsc.gov.in/recruitment/advt/2011/13_11eng.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us