UPDATED : ஜூலை 26, 2011 12:00 AM
ADDED : ஜூலை 26, 2011 12:28 PM
அ நிறம் | அளவு
இது குறித்து இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் திபயந்து மஜும்தார் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், பி.டி.எஸ். படிப்பு என்பது முன்பெல்லாம் 4 ஆண்டு படிப்பும் ஓராண்டு பயிற்சியையும் கொண்டதாக இருந்தது.
தற்போது 5 ஆண்டுகளும் படிப்புக் காலமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு இருந்ததைப் போன்று இப்போதுள்ள பி.டி.எஸ். படிப்பில் மீண்டும் ஓராண்டு பயிற்சி முறையைக் கொண்டு வரும் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஓராண்டு பயிற்சிக் காலத்தில், பல் மருத்துவம் பயிலும் மாணவர்கள் 3 மாதங்கள் கிராமங்களுக்குச் சென்று பணியாற்றுவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
