UPDATED : ஆக 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளுக்காக அகில இந்திய அளவில் சில நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதை அறிவோம்.
இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு மாநிலங்களிலும் உள்ள என்.ஐ.டி. போன்ற தேசிய தொழிற்படிப்பு நிறுவனங்களில் பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேருகிறார்கள்.
ஆனால் கடந்த சில வாரங்களாக அமர்நாத் யாத்திரை தொடர்பான சர்ச்சைகள் எழுந்து பின்பு அது தொடரும் வன்முறையாக மாறியிருப்பதால் ஜம்மு காஷமீர் மாநில மாணவர்கள் பலரும் இந்த அகில இந்திய கல்வி நிறுவன வாய்ப்பை இழந்து வருகின்றனர். 1990களில் உச்சகட்ட வன்முறை இந்த மாநிலத்தில் இருந்த போது கூட இது போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்துவது பாதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு இது போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு இந்த மாநிலத்திலிருந்து மட்டும் 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் வெகுசிலருக்கு மட்டுமே உள்ளூர் கல்லூரிகளில் இடம் பெற முடிந்துள்ளது. ஆனால் சமீபத்திய சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் வன்முறையால் இந்த 20 ஆயிரம் மாணவர்களில் பெரும்பாலானோர் ஒரு கல்வியாண்டை பலனின்றி இழுக்கும் அபாயம் இருப்பதாக மாணவர்கள் கருதுகிறார்கள்.

