தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏசிஎஸ் மாணவர்களுக்கு இக்னோ படிப்பு

ஏசிஎஸ் மாணவர்களுக்கு இக்னோ படிப்பு

ஏசிஎஸ் மாணவர்களுக்கு இக்னோ படிப்பு


UPDATED : ஏப் 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடெல்லி: கம்பெனி செக்கரட்டரிஷிப் பாடப்படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்காகவே பி.காம் (கார்ப்பரேட் அபையர்ஸ்), எம்காம் (பிசினஸ் பாலிசி அண்ட் கார்ப்பரேட் கவர்னன்ஸ்) ஆகிய பாடப்பிரிவுகளை இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டிட்யூட் ஆப் கம்பனி செக்கரட்டரீஸ் ஆப் இந்தியா அமைப்புடன் இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்ய உள்ளது.



இதன்படி கம்பெனி செக்கரட்ரரிஷிப் பவுண்டேஷன் படிப்பில் சேரும் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இக்னோ புதிதாகத் தொடங்கும் இந்த இளநிலை பட்டப்படிப்பில் சேரலாம். பட்டப்படிப்பு முடித்துவிட்டு கம்பெனி செக்ரட்டரிஷிப் எக்ஸ்யூட்டிவ் புரோகிராம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இக்னோ வழங்கும் எ.காம். முதுநிலைப் படிப்பில் சேரலாம். இந்த படிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us