UPDATED : அக் 12, 2011 12:00 AM
ADDED : அக் 12, 2011 04:59 PM
டாக்டர் ரெட்டி அறக்கட்டளை (டிஆர்எப்) சார்பில் இளைஞர்கள் திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. டி.ஆர்.எப்.ஆல் நடத்தப்படும் லைவ்லிவுட் அட்வான்ஸ்மென்ட் பிசினஸ் ஸ்கூல் இந்த 3 மாத திறன் வளர்ப்பு பயிற்சியை அளிக்கின்றது. இதில், தொழில்நுட்பம், கலந்துரையாடல், பணிகளை விரைவாக முடித்தல் போன்றவை குறித்து விளக்கப்படும். இந்த பயிற்சியில் மருத்துவத்துறை, பிபிஓ, ஐடிஇஎஸ், சிஆர்எஸ் மற்றும் ஆட்டோமொபைல், ஆளுமைத் திறன், அடிப்படை கணினி, ஆங்கிலத்தில் பேசும் திறன் போன்றவை கற்பிக்கப்படும். ஒரு நல்ல பணியில் சேர்ந்து பணியாற்றுவதற்கான அனைத்துத் திறன்களையும் கொண்டவராக இந்த பயிற்சி முடித்து வெளிவரும் இளைஞர் காணப்படுவார். மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும் இந்த அமைப்பின் பயிற்சி மையங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 15 இடங்களில் இயங்குகின்றன.
