எம்.பி.ஏ., எம்.சி.ஏ.வில் வெளிநாட்டு மொழிப்பாடம் கட்டாயமாகிறது
எம்.பி.ஏ., எம்.சி.ஏ.வில் வெளிநாட்டு மொழிப்பாடம் கட்டாயமாகிறது
UPDATED : அக் 12, 2011 12:00 AM
ADDED : அக் 12, 2011 05:01 PM
அ நிறம் | அளவு
இந்தியாவில் கலை அறிவியல் படிப்புகள் கொண்ட பல்கலைக்கழகம், இன்ஜினியரிங் உட்பட தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், வேளாண்மை பல்கலைக்கழகங்கள், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உட்பட மொத்தம் 538 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இந்த பல்கலைக்கழகங்களில் இருந்து ஆண்டு தோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவ
, மாணவிகள் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள்.இவர்களில்
20 சதவீதத்தினருக்குத்தான் நல்ல வேலை கிடைக்கிறது. 50 சதவீதத்தினருக்கு ஓரளவிற்கு சுமாரான வேலை கிடைக்கிறது. ஆனால் 30 சதவீதம் பேர் வேலை இல்லாமல் படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலை செய்து வருகின்றனர்.தற்போது வெளிநாட்டு மொழி தெரிந்தால் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது
. இதைக் கருத்தில் கொண்டு சென்னை பல்கலைக்கழகம் அடுத்த கல்வி ஆண்டு முதல் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்பில் கட்டாய பாடமாக பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழியை கொண்டு வந்துள்ளது.இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் திருவாசகம் கூறுகையில்
, இந்திய மாணவர்கள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை வெளிநாடுகளில் உள்ளது. ஆனால் இந்திய மாணவர்களுக்கு அவரகள் வேலைக்குச் செல்லும் நாட்டில் உள்ள மொழி தெரிந்து இருந்தால் இன்னும் அந்த மாணவர்களுக்கு சம்பளம் அதிகம் கிடைக்கும். அதிக மரியாதையும் இருக்கும்.எனவே தமிழக மாணவர்கள் வெளிநாட்டு மொழிகளையும் முறையாக படித்தால் கண்டிப்பாக வேலைவாய்ப்பு உறுதி
.அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் பிரெஞ்ச்
, ஜெர்மனி, ஸ்பானிஷ், சீனா ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இன்னும் ஒருபடி மேலே போய் அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிக்கும் மாணவி, மாணவிகள் கட்டாயம் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழியை படிக்க வேண்டும். இதற்கான பாடத்திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.