தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிதியின்றி தவிக்கும் சாதனை மாணவன்

நிதியின்றி தவிக்கும் சாதனை மாணவன்

நிதியின்றி தவிக்கும் சாதனை மாணவன்


UPDATED : அக் 30, 2011 12:00 AM

ADDED : அக் 30, 2011 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2011 12:00 AM ADDED : அக் 30, 2011 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அபாக்கஸ் கணக்கில், சர்வதேச அளவில் சாதனை புரிந்து வரும் எட்டு வயது மாணவன் ஹரிஷ்ராஜுக்கு, போதுமான நிதி இல்லாததால், ஜப்பானில், டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளார்.

சென்னை, தாம்பரத்தில் உள்ள சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கிறார். கராத்தே, சிலம்பம், யோகா உள்ளிட்ட போட்டிகளில், தேசிய அளவில் சான்றிதழ்கள் பெற்றுள்ளார். ஐந்தே நிமிடத்தில், 100 கணக்குகளை ஒப்புவித்து, பரிசைத் தட்டிச் சென்ற போதுதான், ஹரிஷûக்கு, கணக்கெல்லாம், "தண்ணி பட்ட பாடு" என்பது புரிந்தது. எனவே, அபாக்கஸ் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவர் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் வென்று, பரிசுகள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.

கடந்த 2010ல் நடந்த சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு, "ஏ" பிரிவில் வெற்றி பெற்றார். இந்தாண்டு டிசம்பர் மாதம், ஜப்பானில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருடைய தந்தை நடராஜ், டாக்சி டிரைவர். ஜப்பானுக்கு அனுப்ப 1.5 லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், இவரால் அனுப்ப இயலவில்லை. உதவ முன்வருவோர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: நடராஜ் - 98406 30905.

ஹரிஷ்ராஜின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முன் வருவோர், கீழே உள்ள வங்கிக் கணக்கு எண்ணில் சேர்க்கலாம்:
பெயர்: என்.கே.ஹரிஷ்ராஜ், வங்கி பெயர்: கரூர் வைஸ்யா வங்கி, வங்கிக் கணக்கு எண்: 1617155000025032.
வெளிநாட்டிலிருந்து பணம் செலுத்துவோர், வங்கியின், IFSC Code: KVBL0001617 என்ற எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

வலைதளம்: abacustopper.blogspot.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us