UPDATED : நவ 07, 2011 12:00 AM
ADDED : நவ 07, 2011 02:06 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அம்மாவட்டத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றுப் பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கு செவ்வாயன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
