மாற்று திறன் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி பற்றிய பயிற்சி
மாற்று திறன் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி பற்றிய பயிற்சி
UPDATED : நவ 07, 2011 12:00 AM
ADDED : நவ 07, 2011 03:03 PM
அ நிறம் | அளவு
தர்மபுரி: காரிமங்கலம் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் இந்திரா காந்தி தொலைதூர கல்வி நிறுவனம் சார்பில் மாற்று திறன் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி பயிற்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்
. கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மாது, உதவி தொடக்க கல்வி அலுவலர் முனுசாமி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் மேரிசகாயராணி, வட்டார வள மைய மாற்று திறன் குழந்தைகளுக்கான உள்ளடாக்கி கல்வி ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் கலந்து கொணடனர்.மொத்தம்
90 நாட்கள் கொண்ட இப்பயிற்சி மூன்று வாரங்கள் நேரடியான பயிற்சியும் மற்ற நாட்களில் தொலைதூர பயிற்சியாகவும் வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் இந்திரா காந்தி தொலைதூர கல்வி நிறுவனம் சார்பில் பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது