தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தால் அதிக வேலைவாய்ப்பு

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தால் அதிக வேலைவாய்ப்பு

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தால் அதிக வேலைவாய்ப்பு


UPDATED : நவ 16, 2011 12:00 AM

ADDED : நவ 16, 2011 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2011 12:00 AM ADDED : நவ 16, 2011 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி : "இந்தியாவில், தகவல் தொடர்பு சார்ந்த செயற்கை கோள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளதால், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்" என, கல்லூரி கருத்தரங்கில், இஸ்ரோ முன்னாள் இயக்குனர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி குறித்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர் கருத்தரங்கு நேற்று துவங்கியது.

பெங்களூரு இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மற்றும் விஞ்ஞானி கிருஷ்ணசாமி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: நாட்டில், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, செயற்கை கோள் சார்ந்த விஷயங்களில் பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பல அரிய தகவல்களையும் துல்லியமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

விஞ்ஞானி அப்துல்கலாம், சாரா பாய் ஆகியோரின் நோக்கம் நவீன தொழில்நுட்ப முறைகள் மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த நோக்கம் தற்போது நிறைவேறி வருகிறது.இந்த தூண்டுதலால், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக செயற்கைகோள் தொழில்நுட்பத்தில் முதன்மையில் உள்ளோம்.

இந்தியாவில், தான் அதிகளவில் செயற்கைகோள்கள் உள்ளன. இதில், தகவல் தொடர்பு சார்ந்த செயற்கைகோள்கள் மிக அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இனி வரும் காலங்களில், டெலி - எஜூகேஷன், டெலி மெடிசன் என அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் இருக்கும். இளைஞர்களுக்கும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கும்.

செயற்கைகோள் பயன்பாட்டினால், பூமியில் ஏற்படும் பேரழிவுகளை முன்னெச்சரிக்கையாக துல்லியமாக தெரிவித்து அதிலிருந்து காக்க உதவுகிறது. மக்களின் அன்றாட தேவைக்கும் செயற்கைகோள் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் கிடைக்க வேண்டும்மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில், இளைஞர்கள் கண்டுபிடிப்புகளை கொண்டு வர வேண்டும். இவ்வாறு, முன்னாள் இயக்குனர் கிருஷ்ணசாமி பேசினார்.

விழாவில், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு நடக்கும் கருத்தரங்கில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us