தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எஸ்.டி.,நுழைவுத்தேர்வு அறிவிப்பு

ஐ.ஐ.எஸ்.டி.,நுழைவுத்தேர்வு அறிவிப்பு

ஐ.ஐ.எஸ்.டி.,நுழைவுத்தேர்வு அறிவிப்பு


UPDATED : நவ 16, 2011 12:00 AM

ADDED : நவ 16, 2011 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2011 12:00 AM ADDED : நவ 16, 2011 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (ஐ.ஐ.எஸ்.டி.,) இளங்கலை படிப்புகளில் விண்வெளி பொறியியல், அவியோனிக்ஸ் மற்றும் பிசிக்கல் சயின்ஸ் போன்ற படிப்புகளுக்கு சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

வயது: பொது மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் 1.10.1987 க்கு பிறகும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 1.10.1982 க்கு பிறகும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வி: பொது மற்றும் ஓ.பி.சி., பிரிவினர், 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 70 சதவீத மதிப்பெண்களோடும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களோடும், முதல் முறையில் தேர்ச்சிபெற்றவராக இருக்க வேண்டும்.

தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய கடைசி நாள் டிச.31 . நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்.21ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட இந்தியாவின் முக்கிய 22 நகரங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இயற்பியல்,வேதியல் மற்றும் கணிதம் என்ற மூன்று பாடங்களிலிருந்து மட்டும் கேள்விகள் இடம்பெறும் என்றும் இத்தேர்வின் முடிவுகள் அடுத்த ஆண்டு மே 23,ல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.iist.ac.in/isat2012 என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us