தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லூரிகளில் நடக்கும் அதிகார மோதல்கள்

மருத்துவ கல்லூரிகளில் நடக்கும் அதிகார மோதல்கள்

மருத்துவ கல்லூரிகளில் நடக்கும் அதிகார மோதல்கள்


UPDATED : நவ 16, 2011 12:00 AM

ADDED : நவ 16, 2011 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2011 12:00 AM ADDED : நவ 16, 2011 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசின் சார்பில் தெளிவான அறிவிப்பு வெளியிடப்படாததால், சேலம், சென்னை ஸ்டான்லி, தூத்துக்குடி மருத்துவமனையில் யாருக்கு அதிகாரம் என்பதில், துணை முதல்வர்கள், கண்காணிப்பாளர்கள் மத்தியில் பனிப்போர் வெடித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நியமனம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர்களின் அதிகாரத்தை, தமிழக அரசு குறைப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், சென்னை ஸ்டான்லி, சேலம், தூத்துக்குடி மருத்துவமனைகளில், டீன் பணியிடம் காலியாக உள்ளன. பதவியில் உள்ள துணை முதல்வர்களுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது,

கடந்த ஆட்சியில், தமிழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வர்களின் அதிகாரங்களை இரண்டாக பிரித்து, கண்காணிப்பாளர் பணியிடத்தை உருவாக்கி, அவர்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அரசு வழங்கியது. இதனால், மருத்துவமனைகளின் நிர்வாக செலவு அதிகரித்தது. அத்துடன், புதிதாக நியமனம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர்களில் பெரும்பாலானோர் அரசியல் சார்புடையவர்களாக இருந்தனர். ஆட்சி மாற்றத்தை அடுத்து, மருத்துவமனையின் நிர்வாக செலவுகளை குறைக்கும் வகையில், கண்காணிப்பாளர்களுக்கான அதிகாரம் குறைக்கப்பட்டது.

கண்காணிப்பாளர்களிடம் இருந்த முக்கிய பொறுப்புகளான நிதி, நிர்வாகம், முதல்வர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கண்காணிப்பாளர்கள், மருத்துவமனையில் நடக்கும் தவறுகள், ஊழியர்களின் வருகைப் பதிவேடு விவரங்களை முதல்வர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அது மட்டுமின்றி, முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் கண்காணிப்பாளர்கள் செயல்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

17 மருத்துவக் கல்லூரிகளிலும், முதல்வர்களில், 14 முதல்வர்கள் உடனடியாக கண்காணிப்பாளர்களிடம் இருந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். ஆனால், காலியாக உள்ள சேலம், சென்னை ஸ்டான்லி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பை வகிக்கும் டாக்டர்களிடம், கண்காணிப்பாளர்கள் பொறுப்புகளை ஒப்படைக்க மறுத்து விட்டனர். இதனால், இந்த மருத்துவக் கல்லூரிகளில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்னும் போட்டா போட்டி, டாக்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தற்போது துணை முதல்வர் பொறுப்புகளை வகிப்பவர்கள், மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் வம்சதாரா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் ஆகியோரின் கவனத்துக்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றுள்ளனர். துணை முதல்வருக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த பனிப்போரால், மருத்துவமனை நிர்வாகத்தில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், நிர்வாக செலவு உள்ளிட்ட பைல்களில் யார் கையெழுத்து போடுவது என்ற குழப்ப நிலை தொடர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us