தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோவின் சேவையைப் பாராட்டி விருது

இக்னோவின் சேவையைப் பாராட்டி விருது

இக்னோவின் சேவையைப் பாராட்டி விருது


UPDATED : ஜன 29, 2012 12:00 AM

ADDED : ஜன 29, 2012 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2012 12:00 AM ADDED : ஜன 29, 2012 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டெல்லி: சிறந்த கற்பித்தல் பயிற்சிக்கான விருதை உலகின் பெரிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றான இக்னோ பெற்றுள்ளது.

டெல்லியில் நடந்த India Today Aspire Education Summit 2012 என்ற நிகழ்ச்சியில் இந்த விருதை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.அஸ்லம் பெற்றுக்கொண்டார். "இத்தகையதொரு விருதைப் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும், இக்னோ மிகவும் சரியான மற்றும் வெற்றிகரமான பாதையில் சென்று கொண்டுள்ளது இதன்மூலம் தெரியவருகிறது" எனவும் அவர் கூறினார்.

இந்த விருதை இக்னோவுடன், ஹைதராபாத்திலுள்ள Indian School of Business என்ற கல்வி நிறுவனமும் பகிர்ந்து கொண்டது. கற்றலை, வகுப்பறை அனுபவத்தைவிட மேலானதாக மாற்றியதற்காக அந்த 2 கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 1985ம் ஆண்டு, வெறும் 2 படிப்புகளைக் கொண்டு, 4000 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், இன்றைய நிலையில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சுமார் 450 வகையான படிப்புகளை வழங்கி வருகிறது என்பது மலைக்க வைக்கும் செய்தி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us