தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இணையதளம் மூலம் மாதிரித் தேர்வுகள்

இணையதளம் மூலம் மாதிரித் தேர்வுகள்

இணையதளம் மூலம் மாதிரித் தேர்வுகள்


UPDATED : செப் 30, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதன் மூலம் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்கள் இந்த ஆன்லைன் மாதிரித் தேர்வுகளை எழுதுவதன் மூலம் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் பள்ளிக் கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.


தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 529 பாட நூல்களில் 348 பாடநூல்கள் தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பாடப் புத்தகங்கள் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு நன்கு உதவியாக இருக்கிறது.


இதுதவிர மெட்ரிக் மாணவர்களுக்கான 10 நூல்களும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான 11 நூல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 14 சுற்றுச்சூழலியல் புத்தகங்கள், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டபடி தயாரிக்கப்பட்ட 9 புத்தகங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடவும் தமிழ்நாடு பாட நூல் கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு வினாத்தாள்களும் மாணவர்களின் பார்வைக்காக இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் இணைய தள முகவரி:



http://www.textbooksonline.tn.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us