எஸ்.எம்.எஸ்., வழியாக தேர்வு முடிவுகள்: அறிமுகப்படுத்துகிறது ‘இக்னோ’
எஸ்.எம்.எஸ்., வழியாக தேர்வு முடிவுகள்: அறிமுகப்படுத்துகிறது ‘இக்னோ’
UPDATED : செப் 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தகவல்களை உடனுக்குடனும், எளிதாகவும் மாணவர்கள் அறிந்துகொள்ள இந்த சேவை மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலேயே முதல் முறையாக இந்த சேவையை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்த உள்ளது.
இதற்கான சாப்ட்வேரை வடிவமைக்கும் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் சுரேஷ் கூறியதாவது:
மூன்று நிலைகளைக் கொண்ட இத்திட்டத்தின் முதல் நிலை 15 நாளில் செயல்படுத்தப்படும்.
முதல்நிலை: பல்கலையில் பதிவு செய்துள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பல்வேறு படிப்புகள், பாடப்பிரிவுகள் மற்றும் இந்த சேவை குறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்படும்.
இரண்டாம் நிலை: மாணவர்கள் பல்கலைக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி படிப்புகள், புராஜெக்ட், தேர்வு நாள், தேர்வு முடிவு போன்ற பல்வேறு தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
மூன்றாம் நிலை: முகவரி, தொலைபேசி எண் உட்பட மாணவர்கள் தங்களது சுய விபரங்களை எஸ்.எம்.எஸ்., வழியாக மேம்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு பேராசிரியர் சுரேஷ் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், வெகு தொலைவில் உள்ள மாணவர்கள் இந்த சேவையின் மூலம் பெரிதும் பயனடைவார்கள். வேலைக்கு செல்லும் மாணவர்கள், பல்கலை மாணவர்கள் ஆகியோருக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
