தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணிதத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அண்ணா பல்கலையின் சிறப்பு பயிற்சி

கணிதத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அண்ணா பல்கலையின் சிறப்பு பயிற்சி

கணிதத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அண்ணா பல்கலையின் சிறப்பு பயிற்சி


UPDATED : செப் 30, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.இ., பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளில் 2001ம் ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை படித்த 8 ஆயிரம் மாணவர்கள், பல முறை தேர்வு எழுதியும், கணிதம் தொடர்பான ஏழு பாடங்களில் தேர்வு பெற முடியாததால், பட்டம் பெறமுடியாமல் உள்ளனர்.
இவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் மேம்பாட்டு மையத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் வீதம் 15 நாட்கள் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., வேலூர், சேலம், கோவை, காரைக்குடி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் சேர அக்டோபர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக் கட்டணமாக ரூ. 2,000. வகுப்புகள் அக்டோபர் 15ம் தேதி முதல் துவங்கவுள்ளன. இப்பயிற்சி தொடர்பான மேலும் விவரங்களை www.annauniv.edu இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், “இம்மாணவர்களுக்கு 15 நாள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் நவம்பர் மாத மத்தியில் இம்மாணவர்களுக்கென தனித்தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் உடனடியாக பி.இ., பி.டெக்., பட்டம் பெறமுடியும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us