தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை


UPDATED : செப் 30, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
பள்ளி பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாளை சரியாக திருத்தாத ஆசிரியர்கள் செப்., 29ம் தேதி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்து, ‘இனி தவறு செய்ய மாட்டோம்’ என விளக்க கடிதம் அளித்தனர்.
மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், பிளஸ் 2 தேர்வை ஆறு லட்சம் மாணவர்களும் எழுதினர். இதன் முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன.
பத்தாம் வகுப்பு மாணவர்கள், பாடங்களில் தாங்களுக்கு மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டுள்ளது என்று கருதிய மாணவர்கள், மறுகூட்டல் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தனர். இதில் அதிகமான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கூடின. இதேபோல் மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகிய திட்டங்களின் கீழ் பிளஸ் 2 மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் அதிகமாக கிடைத்தன.
பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள், விடைகளுக்குரிய மதிப்பெண்களை அந்தந்த பக்கத்தில் போட்டுள்ளனர். ஆனால், எல்லா பக்கங்களிலும் வழங்கப்பட்ட மதிப்பெண்களை கூட்டி, மொத்த மதிப்பெண்களை முதல் பக்கத்தில் போடுவதில் கோட்டை விட்டுள்ளனர். ஆசிரியர்களின் மெத்தன போக்கால் பல மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
விடைத்தாள்களை சரியாக திருத்தி, மதிப்பெண் போடாத விவகாரம், மறுகூட்டல் திட்டத்தின் கீழ் வெளிச்சத்திற்கு வந்தது. இரண்டு தேர்வு விடைத்தாள்களையும் சரியாக திருத்தாத, மதிப்பெண் போடாத ஆசிரியர்களை மாநில தேர்வுத்துறை கண்டித்துள்ளது.
விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்கள், அந்த மையத்தின் பொறுப்பாளர்களை தினமும் சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டு வருகிறது.
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், தங்களால் மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டதையும், கூடுதலாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் குறிப்பிட்டு, ‘இனி இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டோம்’ என்றும் உறுதி தெரிவித்து, ஒரு பக்க விளக்கக் கடிதத்தை இணை இயக்குனரிடம் கொடுத்தனர்.
இதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘நாங்கள் செய்த தவறால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
மாணவர்கள் எதிர்காலம் குறித்த விவகாரத்தில் இதுபோன்று தவறுகள் நடக்கவே கூடாது என்று தேர்வுத் துறை கண்டிப்புடன் கூறியுள்ளது’ என்றனர். தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட அது அவர்களுடைய எதிர்காலத்தை பாதிக்கும். எனவே, விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் நூறு சதவீதம் கவனத்துடன் சரியான முறையில் விடைத்தாள்களை திருத்தி, அதற்குரிய மதிப்பெண்களை அளிக்க வேண்டும்.
விடைத்தாளை சரியாக திருத்தாத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளோம். இவ்வாறு கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us