UPDATED : நவ 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
60 ஆயிரம் மாணவர்கள், 500 கல்லூரிகள், 120 நிகழ்ச்சிகள், 4 இரவுகள், 4 பகல்கள் என மொத்தத்தில் 100 மணி நேர இளமைத்திருவிழா நடத்தப்படவிருப்பது மும்பையிலுள்ள ஐ.ஐ.டி.,யில் தான். கலந்து கொள்பவர்களிம் மூட் எப்படியிருக்கும் என சொல்லவும் வேண்டுமா? எனவே தான் பொருத்தமாக இத் திருவிழாவிற்கு மூட் இந்தியா 2008 என பெயரிட்டுள்ளனர். திறன்களை பரிசோதிக்கும் கேம் ஷோக்கள், ஒர்க்ஷாப்கள், லைவாக நடக்கவுள்ள போட்டிகள் என இத் திருவிழாவில் இல்லாத அம்சமே இல்லை எனக் கூறலாம். 3டி போட்டோகிராபி, வீர விளையாட்டுக்கள், இசை, நடனம், நாடகம்,இலக்கியம், நுண்கலை, பேச்சுத் திறன், ஹாட் ஏர் பலு
தனது 50வது பொன் விழா ஆண்டை கொண்டாடவுள்ள மும்பை ஐ.ஐ.டி., இந்த இளமை உற்சவத்தை வரும் டிசம்பரில் நடத்தவுள்ளது. டிசம்பர் 20 முதல் 23 வரை இது நடைபெறும். டில்லி, பீகார் போன்ற இடங்களிலிருந்து இதில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு இத்திருவிழா அவர்களது திறமைகள் அரங்கேறக் கிடைத்துள்ள ஒரு அற்புதமான வாய்ப்பாக அமையவுள்ளது.
பண்டிட் பீம்சென் ஜோஷி, உஸ்தாத் ஜாகிர் அலி கான், பண்டிட் ஹரிபிரசாத் சௌரேசியா, ஜகதீத் சிங், பங்கஜ் உதாஸ், ஆஷா போன்ஸ்லே, கேகே, கைலாஷ் கேர் என அத்தனை நவ இந்தியா சிற்பிகளோடு தொடர்புடைய போட்டிகளும் நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறவுள்ளன.
யூத் பெஸ்டிவல் என்றால் இன்னமும் அதை நமது இளைஞர்களின் மனப்பாங்கில் இனிய மாற்றங்களை கொண்டுவருவதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற விரும்பும் நம்மூர் கல்லூரிகள் இந்த திருவிழாவை கவனித்தால் நமக்கும் சுவாரசியமான இளமை திருவிழாக்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
