தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆட்டிசம் குழந்தை பயிற்சி முகாம்

ஆட்டிசம் குழந்தை பயிற்சி முகாம்

ஆட்டிசம் குழந்தை பயிற்சி முகாம்


UPDATED : மார் 07, 2013 12:00 AM

ADDED : மார் 07, 2013 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2013 12:00 AM ADDED : மார் 07, 2013 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சிறப்பாசிரியர்களுக்கு, ஆட்டிசம் குழந்தைகள் பற்றி பயிற்சி முகாமில், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேசிய நிறுவனம் மற்றும் சித்தர் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆட்டிசம் குழந்தைகள் பற்றிய பயிற்சி முகாமில், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, கரூர் வெண்ணைமலையில் நடந்தது. இதில் நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து, சான்றிதழ்களை வழங்கினார். ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் தலைவர் டாக்டர் நீரதா, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகவல் தொடர்பு திறன் மேம்பாடு குறித்து பயிற்சிகளை அளித்தார்.

பயிற்சியில் திருப்பூர், கோவை, நாமக்கல், திண்டுக்கல், திருவாரூரைச் சேர்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த, 55 சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சி.ஆர்.சி., மையத்தின் பயிற்சியாளர் ராஜேஷ், பேச்சுமொழி ஆய்வாளர் பிரியதர்சினி, சித்தர் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சேதுலிங்கன், ஒருங்கிணைப்பாளர் கலா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us