தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருப்பதி பல்கலையில் ஓலைச்சுவடிகள் ஒப்படைப்பு

திருப்பதி பல்கலையில் ஓலைச்சுவடிகள் ஒப்படைப்பு

திருப்பதி பல்கலையில் ஓலைச்சுவடிகள் ஒப்படைப்பு


UPDATED : மார் 17, 2013 12:00 AM

ADDED : மார் 17, 2013 07:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2013 12:00 AM ADDED : மார் 17, 2013 07:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, முன்னங்கி பொன் வேலப்பன் என்பவர், திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில், புராதன கால ஓலைச் சுவடியில் எழுதப்பட்டுள்ள தகவல்களை பரிசோதனை செய்யும், சிறப்பு பிரிவில் பணியாற்றும், ஆய்வு பேராசிரியர் வெங்கட ரமணா ரெட்டி. இவரிடம் தமிழ், தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை தமிழகத்தை சேர்ந்த பொன் வேலப்பன் என்பவர் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம், பொன் வேலப்பன் கூறியதாவது: கடந்த, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜோதிடம், சங்கீதம், வாஸ்து, வைத்தியம் மற்றும் மந்திர சாஸ்திரங்கள் எழுதப்பட்டுள்ள, ஓலைச்சுவடிகளை தன் முன்னோர்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உள்ள இவற்றை, பிரசித்தி பெற்ற நூல் நிலையங்களுக்கு வழங்கினால் ஜோதிடம், சங்கீதம், வாஸ்து போன்றவற்றில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம், அவற்றில் உள்ள முக்கிய தகவல்களும், வெளிச்சத்திற்கு வரும் என்பதால், இவற்றை திருப்பதி பல்கலைக்கழகத்திற்கு வழங்கினேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் வெங்கட ரமணா ரெட்டி கூறுகையில், "ஓலைச்சுவடிகள் வழங்கிய பொன் வேலப்பன், தற்போது தமிழகத்தில் வசித்தாலும், அவரது முன்னோர்கள், குண்டூர் முன்னங்கி பகுதியை சேர்ந்தவர்கள். ஓலைச்சுவடியில் உள்ள, ராமஸ்துதி என்ற தெலுங்கு மொழி பதிவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை" என தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us