தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் விடுதியில் தரமில்லாத உணவு

மாணவர்கள் விடுதியில் தரமில்லாத உணவு

மாணவர்கள் விடுதியில் தரமில்லாத உணவு


UPDATED : மார் 20, 2013 12:00 AM

ADDED : மார் 20, 2013 02:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 20, 2013 12:00 AM ADDED : மார் 20, 2013 02:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: நந்தனார் பள்ளி மாணவர்கள் விடுதியில் தரமில்லாத உணவு வழங்குவதாக கூறி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்ல உணவு வழங்குவதாக அதிகாரிகள் உறுதி கூறினர்.

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் வெளியூர் மாணவர்கள் தங்கி படிக்க வசதியாக அதே வளாகத்தில் விடுதி உள்ளது. இங்கு 310 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு வழங்கும் உணவுப் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்கின்றனர். விடுதியை சரியாக பராமரிக்காத தால் அடிப்படை வசதிகளின்றி மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. விடுதிக்கு ஒதுக்கும் நிதியில் முறைகேடு நடக்கிறது என உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இந்த விடுதியில் மக்கள் பிரதிநிதிகளின் "ஆதிக்கம்" அதிகம் இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி ஆதிதிராவிட நலத்துறை அரசு செயலர் கண்ணகி பாக்கியநாதன் விடுதியில் அதிரடியாக ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கும் உணவு வழங்கும் பதிவேட்டில் பல முறைகேடுகள் நடந்திருந்தன. வளாகத்தை சுற்றிலும் குப்பை மேடுகள் இருந்தன. மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்காதது என பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நலத் துறை தாசில்தார், தாட்கோ மேலாளர்களை கண்டித்தார்.

விடுதியில் மாணவர்கள், சிறையில் இருக்கும் கைதிகள் போல் உள்ளனர். விடுதிக்கு ஏராளமான நிதி உள்ளது. மாணவர்களுக்கு சலுகையாக அரசு வழங்கும் உணவு, எண்ணெய், சோப்பு, பாய், போர்வை போன்றவற்றை உடன் வழங்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவிட்டுச் சென்றார். ஆனால் இது வரை அவற்றை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை.

விடுதியில் பல ஆண்டுகளாக அரசு பட்டியல் கொடுத்தவாறு உணவு வழங்குவது இல்லை. வாரத்தில் இரு நாட்கள் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற உணவு வழங்க வேண்டும். தற்போது விடுதி மாணவர்களுக்கு மஞ்சள் நிறத்தில் சோறு, காய்கறி இல்லாத ரசம் போன்ற சாம்பார், வெள்ளை தண்ணீர் மோர், களி போன்ற உப்புமா மட்டுமே வழங்கப்படுகிறது. சாதாரண இட்லி வழங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதற்கு வழங்கும் பொருள்கள் என்ன ஆகிறது என்பது புரியாத புதிராக உள் ளது.

வாரத்தில் பல நாட்களில் சமையலர் இரவு கூடுதலாக சோறு வடித்து, அதனையே காலையில் புளி சாதம், தயிர் சாதம், கஞ்சித்தண்ணீர் சாதம் வழங்குகின்றனர். வார்டன் பெருஞ்சித்தனிடம் சாப்பாடு சரியில்லை, நன்றாக செய்து கொடுங்கள் என மாணவர்கள் முறையிட்டனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் மாணவர்கள் பல நாட்கள் பட்டினியாக இருந்துள்ளனர்.

நேற்று காலை விடுதியில் கூழ் போன்ற உப்புமா செய்து கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அமைப்பு தலைவர் சுனில் குமார் தலைமையில் சாப்பிடாமலும், பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் ரங்கராஜன், விடுதி வார்டன் பெருஞ்சித்தன் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம், இட்லி வழங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இட்லி வழங்குவதாக பதிவேட்டில் குறித்துள்ளனர். கழிவறை சரியில்லை, அடிப்படை வசதிகள் ஏதும் சரியாக இல்லை என சரமாரியாக புகார் கூறினர்.

அதற்கு தாசில்தார் ரங்கராஜன், இன்று இரவு முதல் அரசு பட்டியல்படி உணவு வழங்கப்படும். உணவு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதை ஒரு குழு அமைத்து விசாரணை செய்து ஏப்ரல் 19ம் தேதிக்குள், மாணவர்கள் மத்தியில் அறிக்கை வாசிக்கப்படும். இதில் யார் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு அரசு சலுகைகள் எல்லாம் படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us