தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக சாதனைக்கு ஆசிரியர் முயற்சி

உலக சாதனைக்கு ஆசிரியர் முயற்சி

உலக சாதனைக்கு ஆசிரியர் முயற்சி


UPDATED : மார் 25, 2013 12:00 AM

ADDED : மார் 25, 2013 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2013 12:00 AM ADDED : மார் 25, 2013 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: ஆயிரம் தமிழ் வார்த்தைகளுக்கு, ஆயிரம் நிமிடத்தில் தொடர்ந்து விளக்கம் அளித்து, வாலிபர் ஒருவர், உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோகுலராஜ் (35), ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர். நேற்று காஞ்சிபுரம் காந்திரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், ஆயிரம் தமிழ் வார்த்தைகளுக்கு, ஆயிரம் நிமிடங்களில், விளக்கம் அளித்தார்.

இதற்காக அவர் 16 மணி நேரத்தை எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இவர் இதற்கு முன்பு, 11 மணி நேரம் தொடர்ந்து "மிமிக்ரி" செய்தும், 12 மணி நேரம் கவிதை வாசித்தும் சாதனை படைத்துள்ளார்.

மேலும், 1,330 திருக்குறளை 1,330 பேருக்கு தொடர்ந்து அலைபேசி மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us