தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படிப்புடன் திறமைகளை வளர்க்க வேண்டும்:

படிப்புடன் திறமைகளை வளர்க்க வேண்டும்:

படிப்புடன் திறமைகளை வளர்க்க வேண்டும்:


UPDATED : மார் 28, 2013 12:00 AM

ADDED : மார் 28, 2013 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2013 12:00 AM ADDED : மார் 28, 2013 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையில் தினமலர் மற்றும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை இணைந்து நடத்திய, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி "வழிகாட்டி" நிகழ்ச்சி நிறைவு விழாவில், "வேலைவாய்ப்புக்கு தயாராவது எப்படி" என்ற தலைப்பில் அவர் நேற்று பேசியதாவது:

நம்முடைய கல்வி முறை, மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை சோதிப்பதாக உள்ளது. தற்போதைய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, மாணவரின் பட்டப்படிப்பு வேலைக்கான தகுதி மட்டுமே. போட்டி என்று வந்துவிட்டால், மாணவர்களின் தனித்திறமைகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மதிப்பெண்கள் பெறுவதற்கு மட்டும் படிக்கக் கூடாது.

விரும்பிய படிப்புக்களை மட்டும் தேர்வு செய்யுங்கள். படிப்பை தேர்வு செய்வதில், ஆசைகளை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்க கூடாது. கல்லூரிகளை தேர்வு செய்யும்போது தகுதியான ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கல்லூரி படிப்பின் போது, பாடங்களை தவிர தனித் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக "பாசிடிவ்&' செயல்பாடு, மொழித்திறன், ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு, ஆளுமை பண்பு, குழு விவாத திறமைகளை வளர்த்துக்கொண்டால் அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்பது உறுதி, என்றார்.

நேனோ டெக்னாலஜி, ஏரோ நாட்டிக்கல்/ ஏரோஸ் ஸ்பேஸ், ஆட்டோ மொபைல்: சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை பேராசிரியர் அரவிந்தன் பேசியதாவது:

மனித வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல வாகனங்களுக்கு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் முக்கியம். இத்துறையில் வடிவமைப்பு என்பது முக்கியமானது. அதை நாம் தெளிவாக கற்றுக்கொண்டால், ஆட்டோ மொபைல் துறைக்கு தேவைப்படும் உதிரி பாகங்களை நாம் தயாரிக்க முடியும்.

இப்படிப்புகளை படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும். "மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இன் ஏரோ நாட்டிக்&', இறுதியாண்டு படிக்கும் போதே வேலை உறுதி செய்யப்பட்டுவிடும். ஏரோ ஸ்பேஸில், மெக்கானிக்கலுடன், எலக்ட்ரானிக்ஸ் இணைந்து, தற்போது விமானத்தில் ராக்கெட் இன்ஜின் பொருத்தி, அதிவேகத்தில் செல்லும் சூப்பர்சானிக் ஏரோ ஜெட் தயாரிக்கப்படுகிறது.

பல நாடுகளில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர். நவீன தொழில்நுட்ப முறையில், இப்போது இத்துறையில் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. விமானம், விலை உயர்ந்த கார்களில் இந்த தொழில் நுட்பத்தால் உதிரி பாகங்கள் எடை குறைத்தும், வலுவை அதிகரித்தும் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் ஏராளமான ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர்கள் தேவைப்படுவர், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us