தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"படித்த கல்லூரியை மறக்கக் கூடாது"

"படித்த கல்லூரியை மறக்கக் கூடாது"

"படித்த கல்லூரியை மறக்கக் கூடாது"


UPDATED : ஏப் 08, 2013 12:00 AM

ADDED : ஏப் 08, 2013 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2013 12:00 AM ADDED : ஏப் 08, 2013 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: "வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு சென்றாலும், படித்த கல்லூரியை மறந்துவிடக் கூடாது," என கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி உற்பத்தித் துறைத்தலைவர் அமிர்த காடேஸ்வரன் பேசினார்.

திருப்பூர், பொல்லிகாளிபாளையத்தில் உள்ள ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ஆறாம் ஆண்டு விழா நடந்தது.  விழாவில் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி உற்பத்தித்துறைத் தலைவர் அமிர்த காடேஸ்வரன் பேசியதாவது: இரட்டை முனை கத்தியை கவனமாக கையாள்வதுபோல், கல்லூரி படிப்பில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்; கிளைகள் விரிந்து பரவிச் சென்றாலும், அதன் வேர் ஓரிடத்தில் இருப்பதுபோல், மாணவர்கள் படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு சென்றாலும், படித்த கல்லூரியை மறந்து விடக்கூடாது.

சிறு வயதில் இருந்தே ஒழுக்கம் என்ற விதையை விதைத்து, கல்லூரி படிப்பு வரை அழைத்துச் செல்லும் உங்களை, எந்த சூழ்நிலையில் பெற்றோர், கல்லூரியில் சேர்த்தார்கள் என்பதை நினைத்து பார்த்தால், உங்கள் வாழ்வில் வெற்றி என்பது நிச்சயம். படிக்கும் வயதில் சந்தோஷமாக ஊர் சுற்றி திரிந்தாலும், படிப்பில் முழு கவனத்தை செலுத்தி, வாழ்க்கையில் உயரும் எண்ணத்தை கருத்தில் கொள்ள வேண்டும். செய்யும் செயலில் முழு மனதுடன் ஈடுபட்டால் சிரமம் இல்லை.

விஞ்ஞானம் அசுர வளர்ச்சியில் செல்லும் இக்காலக்கட்டத்தில், மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. பண்டிகை காலங்களில் கடைபிடிக்கும் விரதங்களைபோல், படிப்பிலும் உழைப்பு என்ற விரதத்தை கடைபிடித்தால், கடவுளின் அருள் நிச்சயமாக கிடைக்கும்; மாணவர்கள் படிக்கும் காலத்தில், படிப்பில் முழு கவனத்தை செலுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us