தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜெயித்துக்காட்டுவோம்: காரைக்குடியில் திரண்ட மாணவர்கள்!

ஜெயித்துக்காட்டுவோம்: காரைக்குடியில் திரண்ட மாணவர்கள்!

ஜெயித்துக்காட்டுவோம்: காரைக்குடியில் திரண்ட மாணவர்கள்!


UPDATED : நவ 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை.,யுடன் இணைந்து சுபலட்சுமி பேலஸில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். பொது தேர்வு வெற்றிக்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இதில் பங்கேற்க அதிகாலை 5.30 மணியிலிருந்தே மாணவர்கள் வர துவங்கினர்.
எம்.எஸ். தண்டபாணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
ஆசிரியர்கள் வழங்கிய  டிப்ஸ் :
பத்தாம் வகுப்பு:
பி.ராதாகிருஷ்ணன், காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலம்):
பாட புத்தகத்தை நன்கு படிக்கவேண்டும். இலக்கண பிழையின்றி, தெளிவாக விடை எழுதவும். இறந்த, நிகழ், வருங்கால வாக்கியம் மற்றும் 12 காலங்களை நன்கு படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.
எஸ்.கனகராஜ், காரைக்குடி மு.வி., அரசு மேல்நிலைப்பள்ளி (கணிதம்):
சூத்திரங்களை நன்கு எழுதி படிக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டு பொது தேர்வு கேள்வித்தாள்களுக்கு விடை எழுதி பழகவேண்டும். அடித்தல், திருத்தம் இன்றி விடையளிக்கவும். புத்தகத்தில் உள்ள பயிற்சி கணக்குகளை அடிக்கடி செய்து பார்த்தால் நூறு மதிப்பெண் பெறலாம்.
வி.சுவாமிதாஸ், முத்துப்பட்டணம்  அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி (அறிவியல்):
புத்தகத்தை நன்கு படித்து அதில் உள்ள ஒரு மதிப்பெண் விடைகளை புரிந்து எழுதி பழக வேண்டும். பழைய பொதுதேர்வு கேள்விகளுக்கு விடை எழுதி பழகவேண்டும்.
மெட்ரிக்.,:
பி.சண்முகசுந்தரி, கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலம்):
புத்தகத்தை நன்கு படித்து கேள்விகளுக்கு விடை எழுதி பழகவேண்டும். இலக்கண பிழையின்றி தெளிவாக எழுதினால் அதிக மதிப்பெண் பெறலாம்.
பி.தாமரை செல்வி, காரைக்குடி அழகப்பா மெட்ரிக்.,மேல்நிலைப்பள்ளி (கணிதம்):
புத்தகத்தில் உள்ள அனைத்து சூத்திரங்களையும் மறக்காமல் மனதில் வைத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடந்த பொது தேர்வு வினாக்களுக்கு விடை எழுதி பழகவேண்டும். வரைபடம் உள்ளிட்ட பெரிய கேள்விகளுக்கு தெளிவான முறையில் விடை அளித்தால் அதி மதிப்பெண் கிடைக்கும்.
சி.மீனாட்சி, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி (அறிவியல்1):
ஒரு மதிப்பெண் கேள்விகளை புத்தகத்தில் இருந்து நன்கு படிக்க வேண்டும். முக்கிய வார்த்தைகளுக்கு அடிக்கோடிட்டு காட்டினால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். 2 மற்றும் 3 மதிப்பெண் கேள்விகளை எழுதி பார்க்க வேண்டும். புளுபிரிண்ட் படி பாடங்களை படிக்க வேண்டும்.
எஸ்.முருகேஷ்பாபு, திருப்புத்துவர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக்.,மேல்நிலைப்பள்ளி (அறிவியல்2):
பழைய பொது தேர்வு கேள்வி தாளை ஒருங்கிணைத்து, அதற்கு விடையளித்து பழக வேண்டும். முக்கிய குறிப்புகளை கோடிட்டு காட்ட வேண்டும்.


பிளஸ் 2:

ஆர்.அண்ணாமலை, காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலம்):
கேள்வி முறைகளை அறிந்து கொள்ள வேண்டும். நடைமுறை ஆங்கில அறிவு அவசியம். பொது அறிவு திறன் இருந்தால் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெறலாம். இலக்கணத்தில் 65 மதிப்பெண், செய்யுள், உரைநடையிலிருந்து 35 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். இலக்கணத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
ஆர்.சுவாமிநாதன், காரைக்குடி அழகப்பா மெட்ரிக்.,மேல்நிலைப்பள்ளி (கணிதம்):
புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை நன்கு படிக்க வேண்டும். கல்வித்துறை வெளியிடும் "கம்புக்' ல் இருந்து 10 ஒரு மதிப்பெண் கேள்விகள் வரும். 10 மற்றும் 6 மதிப்பெண் கணக்குகளை தினமும் எழுதி பார்க்க வேண்டும். முக்கிய சூத்திரங்களை எழுதி பார்த்தால் எளிதில் நூறு மதிப்பெண் பெறலாம்.
டீ.ரமா, தேவகோட்டை தூயமரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி (இயற்பியல்):
பதில்களை படிப்பதோடு, எழுதியும் பார்க்க வேண்டும். வாய்ப்பாடு, சமன்பாடுகளை மனதில் பதிய வைக்க வேண்டும். கட்டாய  விடையளிக்க வேண்டிய கேள்விகளுக்கு, முக்கிய இடங்களில் அடிக்கோடிட வேண்டும்.
ஆர்.ஞானாம்பாள், காரைக்குடி மு.வி., அரசு மேல்நிலைப்பள்ளி (தாவரவியல்):
விடையை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். பெரிய வினாக்களுக்கு உப தலைப்புகள் கொடுத்து எழுத வேண்டும். தாவரங்களின் பெயர்களை மறந்து விடக்கூடாது. 3 மதிப்பெண் கேள்விகளுக்கு உதாரணத்துடன் பதில் அளிக்க வேண்டும்.
பி.ரஞ்சித், காரைக்குடி அழகப்பா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி (வேதியியல்):
சமன்பாடுகளை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். தேர்வில் சமன்பாடுகளை முறையாக நிறைவு செய்ய வேண்டும். காரணங்கள் குறித்த கேள்விகள் அதிகம் கேட்கப்படும். சூத்திரம் மிக அவசியம்.
வி.மேரிஜாஸ்மின், காரைக்குடி அழகப்பா மெட்ரிக்.,மேல்நிலைப்பள்ளி (விலங்கியல்):
முதல் 5 பாடங்களை நன்றாக படித்தால் 15 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கலாம். திட்டமிட்ட நேரப்படி தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண் பெறலாம். கடந்த ஆண்டு வினாத்தாட்களுக்கு விடை அளித்து எழுதி பழகினால் தேர்வுகளை பயமின்றி எழுதலாம்.

இணைந்து வழங்கியோர்:
நிகழ்ச்சியை மாதா பம்ப்ஸ், இதயம் பைப்ஸ், ஜெ.கே.ரியல் எஸ்டேட், காரைக்குடி அழகப்பா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருப்புத்துவர் விவேகானந்தா பாலிடெக்னிக் காலேஜ், காரைக்குடி தங்கமயில் ஜூவல்லர்ஸ், அப்துல்லா மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து வழங்கின.
மாணவர்களுக்கு தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் மாதிரி வினா விடை, உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளிடையே கேள்விகள்  கேட்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
 
கண் கலங்க வைத்த மாணவர்

தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியின் இடையே  மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பதில் அளித்து விட்டு பேசிய புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர் நாசர் உசேன், அப்பா இறந்து விட்டார். மூன்று அண்ணன்கள் 8 ம் வகுப்பு படித்து விட்டு மில்லில் வேலை செய்கின்றனர்.
அவர்களும், அம்மாவும் சிரமத்திற்கு இடையே என்னை படிக்க வைக்கின்றனர். குடும்ப கஷ்டத்தை உணர்ந்து அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். டாக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்வேன். தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி என் போன்ற மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது என கண்ணீர் வடித்தார். அவரது பேச்சை கேட்டு மற்ற மாணவர்களும் கண் கலங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us