தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : செப் 26, 2013 12:00 AM

ADDED : செப் 26, 2013 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2013 12:00 AM ADDED : செப் 26, 2013 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் அரசுக் கல்லூரி மாணவ மாணவிகள் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை மற்றும் பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர் பேரவை தேர்தல் 2009 கல்வி உரிமை சட்டம் முழுவதுமாக அமல்படுத்துதல், வெளிநாட்டு பல்கலைகழகங்களை அனுமதிக்க கூடாது. அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும்.

ஆய்வக வசதி, குடிநீர், கழிவறை வசதிகள், கல்வி உதவி தொகையை துவக்கத்திலேயே வழங்க வேண்டும். விடுதிகளில் தூய்மையான சத்தான உணவு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டிவனம் அரசுக் கலைக்கல்லூரியில் காலை பேட்ச் மாணவ, மாணவிகள் காலை 10.30 மணிக்கும், மதியம் பேட்ச் மாணவ, மாணவிகள் பிற்பகல் 2 மணிக்கும், வகுப்புகளை புறக்கணித்து மேல்பாக்கம் ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேர ஆர்ப்பாட்டத்திற்கு பின் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us