கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு
கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : செப் 26, 2013 12:00 AM
ADDED : செப் 26, 2013 10:33 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம், எம்.எஸ்சி., இயற்பியல் மற்றும் விலங்கியல் பாட பிரிவுகளில் சேர்வதற்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி நடக்கிறது.
கல்லூரி முதல்வர் கோவிந்தன் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறியவில் கல்லூரியில், 2013-14ம் ஆண்டில் பி.ஏ., பொருளாதாரம் (ஆங்கில வழி மற்றும் தமிழ்வழி) மற்றும் எம்.எஸ்சி., இயற்பியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகள் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பாடப் பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரும், 28ம் தேதிக்குள் கல்லூரியில் சமர்பிக்க வேண்டும்.
மேலும், இந்த பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான கலந்தாய்வு வரும், 30ம் தேதி 9 மணிக்கு கல்லூரியில் நடக்கிறது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
