UPDATED : டிச 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
சென்னை: படிப்பது, தேர்வு எழுதுவது என்பதோடு மட்டும் இருந்து விடாமல், தங்களின் தனித்திறமைகளையும் மாணவ, மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டுமென கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பது மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் இளம் அறிவு ஜீவிகள் சாரதி (13), சுவாதி(11). இவர்கள் மற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கணித ‘முக்கோணவியல்’ குறித்து கலந்துரையாடினர்.
சென்னை கொளத்தூரில் நடந்த இந்த நிகழ்ச்சியை, தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா துவக்கி வைத்து பேசினார். வேலம்மாள் பள்ளி முதல்வர் கோபிநாத், சாரதி, சுவாதியின் பெற்றோர் முருகானந்தம், உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
