தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


UPDATED : டிச 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள 2,251 பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர்களை நியமனம் செய்யக் கோரிய மனுவை அரசு பரிசீலிக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உடற்கல்வியாளர்கள் சங்க பொதுச் செயலர் பாஸ்கர் தாக்கல் செய்த மனு:
பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்தின் பரிந்துரையை ஏற்று, 400 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் பணியிடங்களை தரம் உயர்த்த தமிழக அரசு ஒப்புக் கொண்டது. 1980ம் ஆண்டு கல்வித்துறை பிறப்பித்த உத்தரவின்படி, 200 உடற்கல்வி இயக்குனர்கள் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 1,296 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 1,062 அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சிகளில் உள்ள 93 மேல்நிலைப் பள்ளிகளில் 600 உடற்கல்வி இயக்குனர்கள் பணியிடங்கள் தான் உருவாக்கப்பட்டன. 29 ஆண்டுகளாக புதிதாக உடற்கல்வி இயக்குனர் பணியிடம் உருவாக்கப்படவில்லை.
கடந்த 97ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, 400 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில் ஒரு உடற்கல்வி இயக்குனரை நியமிக்க வேண்டும். இப்படி ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டும், 400 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக உடற்கல்வி இயக்குனரை நியமிக்க அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இதுவரை 600 உடற்கல்வி இயக்குனர்கள் தான் பணியில் உள்ளனர். 2,251 பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் நியமிக்கப்படவில்லை. ஊதிய விகித மாற்றம், உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, 2,251 பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனரை நியமிக்க ஒப்புதல் அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெ.செல்வராஜன் வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி பிறப்பித்த உத்தரவு:
பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர்களை நியமிப்பது தொடர்பான அரசாணையை முறையாக அரசு பரிசீலிக்க வேண்டும். மார்ச் மாதம் மனுதாரர் அனுப்பிய மனுவை அரசு பரிசீலிக்கவில்லை என கூறப்பட்டது. எனவே, அந்த மனுவை தகுதி மற்றும் 97ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி சட்டப்படி பரிசீலித்து, 12 வாரங்களுக்குள் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us