தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மேக்மில்லன் நிறுவனம்
தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மேக்மில்லன் நிறுவனம்
UPDATED : டிச 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதற்காக பிரிட்டனைச் சேர்ந்த டியூட்டர் விஸ்டா என்னும் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான எஜுரைட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவெங்கும் உள்ள 18 ஆயிரம் பள்ளிகளில் இந்த முறையிலான கல்வி முறையைக் கொண்டு வர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவிலுள்ள 15 ஆயிரம் பள்ளிகளில் மேக்மில்லன் நிறுவனமும் 3 ஆயிரம் பள்ளி களில் எஜூரைட் நிறுவனமும் தொடர்புகளைக் கொண்டுள்ளன. டிஜி ஆலி என்னும் சாப்ட்வேர் உதவியுடன் இந்தப் பள்ளிகளில் ஒலி, ஒளி வாயிலான படிப்பு முறையைத் தர திட்ட
மிடப்பட்டுள்ளதாக மேக்மில்லன் நிறுவனத்தின் அதிகாரபூர்வ செய்தி கூறுகிறது.
பாடப் பகுதிகளை உரைநடை, வீடியோ மற்றும் படங்கள் வாயிலாக நடத்துவது ஆசிரியர்களுக்குப் பேருதவியாக இருப்பதுடன் மாணவர்களும் பாடங்களை ஆர்வத்துடன் படிக்க உதவும். தொழில் நுட்ப ரீதியாக சிறந்து விளங்கும் எஜூரைட் நிறுவனமும் தரமான புத்தகங்களுக்குப் பெயர் பெற்ற மேக்மில்லன் நிறுவனமும் இணைந்து வழங்கவுள்ள இந்த புதிய கல்வி முறை இந்திய பள்ளிகளிலுள்ள வகுப்பறைகளை அவற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என நம்பலாம்.
