தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிண்டிகேட் உறுப்பினர்களுடன் துணைவேந்தர் ஆலோசனை

சிண்டிகேட் உறுப்பினர்களுடன் துணைவேந்தர் ஆலோசனை

சிண்டிகேட் உறுப்பினர்களுடன் துணைவேந்தர் ஆலோசனை


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 02:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 02:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்களுடன், துணைவேந்தர் கல்யாணி ஆலோசனை நடத்தினார்.

துணைவேந்தர் நியமனம் செல்லாது என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில், ஐகோர்ட் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

இதற்கிடையே இடைக்கால தடை உத்தரவு பெறுவதற்கு முன், பல்கலைக்கு கன்வீனர் கமிட்டி அமைக்க, உயர்கல்வி துறை செயலாளருக்கு சிண்டிகேட் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கு மீண்டும் வந்த துணைவேந்தருக்கு எதிர்பாராத வகையில் தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை காரணம் காட்டி பல்கலை வக்கீலாக இருந்த ஐசக் மோகன்லால், விலகுவதாக பல்கலைக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், சிண்டிகேட் உறுப்பினர்களுடன் துணைவேந்தர் அவசர ஆலோசனை நடத்தினார்.

கருத்து மோதல்?: சிண்டிகேட் கூட்டம் நடத்தும் தேதி முடிவு செய்வது, ஓய்வு பெற்ற செல்லத்துரை, ஜெயலட்சுமி ஆகியோருக்கு பதில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதில், கன்வீனர் கமிட்டி அமைக்க கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பாக விவாதிக்கப்பட்டதில் துணைவேந்தருக்கும், சில உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us