தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு மருந்துகளை விற்க தடை

மாணவர்களுக்கு மருந்துகளை விற்க தடை

மாணவர்களுக்கு மருந்துகளை விற்க தடை


UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM

ADDED : ஜூலை 12, 2014 11:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM ADDED : ஜூலை 12, 2014 11:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: பல்வேறு மருந்துகளை மாணவர்கள் போதை உட்பட தவறான காரணங்களுக்கு பயன்படுத்துவதால்,மருந்துக்கடைக்காரர்கள் மாணவர்களுக்கு விற்க கூடாது எஸ்.பி., மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: உடல் நலனை காக்கும் பல்வேறு மருந்துகளை மாணவர்கள் போதை உட்பட தவறான காரணங்களுக்கு பயன்படுத்துகின்றனர். வீட்டில் பெரியவர்கள் வாங்கி வரச்சொன்னதாக கூறி, அவர்கள் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே மருந்துக்கடைக்காரர்கள் மாணவர்களுக்கு மருந்துகளை விற்க வேண்டாம். பெரியவர்கள் வந்தால் மட்டும் கொடுக்க வேண்டும் அல்லது அவசர காரியங்களுக்கு முக்கிய மருந்துகளை டாக்டர் சீட்டு கொண்டு வந்தால் தரலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இது குறித்து ஒவ்வொரு டி.எஸ்.பி. தலைமையிலும் மருந்துக்கடைக்காரர்களை அழைத்து மீட்டிங் நடத்தி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அடுத்து எஸ்.பி. அலுவலகத்தில் எனது தலைமையில் மீட்டிங் நடத்தி அறிவுரைகள் வழங்கப்படும் என்றார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us