தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இறுதிக்கட்டத்தை எட்டிய எம்.பி.ஏ., கலந்தாய்வு

இறுதிக்கட்டத்தை எட்டிய எம்.பி.ஏ., கலந்தாய்வு

இறுதிக்கட்டத்தை எட்டிய எம்.பி.ஏ., கலந்தாய்வு


UPDATED : ஆக 12, 2014 12:00 AM

ADDED : ஆக 12, 2014 02:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2014 12:00 AM ADDED : ஆக 12, 2014 02:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் பொதுப் பிரிவினருக்கான எம்.பி.ஏ., கலந்தாய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை 4,739 பேர் தாங்கள் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர்.

அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் (ஜி.சி.டி.,) எம்.பி.ஏ., படிப்புக்கான கலந்தாய்வு, ஜூலை 30ம் தேதி துவங்கியது; வரும் 14ம் தேதி நிறைவடைகிறது. முதல் நாள் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து, 31ம்தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.

மாணவர்களின் "கட் ஆப்" மதிப்பெண் அடிப்படையில், காலை 8.00 மணி, 10.00, மதியம் 12.00 மணி, 2.00 மணி, மாலை 4.00 மணி என ஐந்து பிரிவுகளாக கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்நிலையில், எம்.பி.ஏ., கலந்தாய்வு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று அழைப்பு விடுக்கப்பட்ட 692 பேரில், 456 பேர் தாங்கள் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர். இதுவரை, அழைப்பு விடுக்கப்பட்ட 7,585 பேரில், 4,739 பேர், தாங்கள் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர்; 45 பேர் எந்த கல்லுாரியை தேர்வு செய்யவில்லை. கவுன்சிலிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us