தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஜன 01, 2015 12:00 AM

ADDED : ஜன 01, 2015 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2015 12:00 AM ADDED : ஜன 01, 2015 01:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆலங்குடி: ஆலங்குடி அருகே, வம்பன் பிஷப் பாக்கியம் கல்வியியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, கல்லூரி தாளாளர் அருள் இருதயம் தலைமை வகித்தார். முதல்வர் அந்தோணிசாமி வரவேற்றார். அண்ணாமலை பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் நெல்லையப்பன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு வலைதளம், பன்முக ஊடகவியல், மின்னஞ்சல் உரையாடல், டிஜிட்டல் நூலகங்கள், கம்ப்யூட்டர் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைத்துள்ளது. இவ்வசதிகளை பயன்படுத்தி, கற்றல்- கற்பித்தலை திறம்பட செய்ய முடியும். ஆசிரியர்கள் சமூக நல்லிணக்கம், தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கு, தங்களை வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேசத்தை சிறந்த வழியில் கொண்டு செல்ல, உயர்ந்த அறிவை பெற்ற ஆசிரியர்களால் தான் முடியும். இன்றைய கல்விமுறை, உலகத்தை துரிதமாக மாற்றிக்கொண்டிருகிறது. விண்வெளி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றுக்கு இன்றைய கல்விநிலை துணையாக நிற்கிறது. உலக நாடுகளில் திறமையான ஆசிரியர்கள் தேவை அதிகம் உள்ளது.

உலகத்திற்கு ஆங்கிலத்தை கற்பித்த இங்கிலாந்து நாட்டில், நம் நாட்டு ஆசிரியர்கள் ஆங்கிலம் போதிக்கிறார்கள். எனவே, ஆசிரியர்கள் தங்கள் திறமையையும், அறிவையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.ஆசிரியர் ராஜராஜன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us